» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:53:00 AM (IST)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகேயுள்ள பூங்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தர்மர் மகன் பார்வதிமுத்து (28). இவர், ஒரு சிறுமியை கடந்த 19.2.2012 அன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) ப்ரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட பார்வதிமுத்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் ரூ. 2,500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

புதுவையில் ரேஷன் கடைகள் இல்லையா? விஜய் கருத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதன் 10, டிசம்பர் 2025 5:27:49 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
புதன் 10, டிசம்பர் 2025 4:12:55 PM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக பயணம் தொடரும் : எடப்பாடி பழனிசாமி
புதன் 10, டிசம்பர் 2025 1:44:50 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)


