» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக பயணம் தொடரும் : எடப்பாடி பழனிசாமி
புதன் 10, டிசம்பர் 2025 1:44:50 PM (IST)
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் அதிமுக-வின் பயணம் தொடரும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல தரப்பு மக்களும் பயனடையும் திட்டங்களைத் தந்தனர். அமைதி, வளம், வளர்ச்சி என்ற கொள்கை தாரக மந்திரமாக தந்தவர் ஜெயலலிதா. மக்களையே தங்களது வாரிசாகப் பார்த்தவர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் என்று இபிஎஸ் கூறியுள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதன்பின்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அதிமுக அழுத்தம் கொடுத்த பிறகே, மகளிருக்கு ரூ.1,000 கிடைத்தது.
தேர்தல் நெருங்குவதால் மடிக்கணினி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். 15 நாள்கள் நெல் கொள்முதல் நிலையத்தை மூடியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திமுக அரசால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளைப் பார்க்க உதயநிதிக்கு அச்சம். மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டார் ஸ்டாலின்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம் வெளியாகி வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் கொலை நிலவரம் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் ஊழலும் போதைப் பொருளும் அதிகரித்துள்ளது. கரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஓராண்டு காலம் ஆட்சியை நடத்திக் காட்டினோம். விலைவாசி தற்போது உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும்நிலையில், அதன் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் என்றாலே, முதல்வர் ஸ்டாலின் அலறவில்லை, துடிக்கிறார். ஏனென்றால் கள்ள ஓட்டு போட்டு ஜெயித்தவர்கள் என்பதால்தான். இரட்டை வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு இருக்கிறது? உயிரிழந்தவர்களின் வாக்குகளை நீக்குவதில் என்ன தவறு? தற்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இந்த நிலைதான் உள்ளது. தமிழகம் முழுவதும் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் நீக்கப்படவில்லை என்றால் என்னவாகும். இவர்களை வைத்து கள்ள ஓட்டு போட்டு திமுக ஜெயித்துவிடும். அது நடக்காது என்றுதான் திமுகவினர் துடிக்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

புதுவையில் ரேஷன் கடைகள் இல்லையா? விஜய் கருத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதன் 10, டிசம்பர் 2025 5:27:49 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
புதன் 10, டிசம்பர் 2025 4:12:55 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:53:00 AM (IST)

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)


