» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்

புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)



களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினத்தையொட்டி, அன்னராது திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, இன்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், விளவங்கோடு வட்டாட்சியர் வயோலா பாய், களியக்காவிளை பேரூராட்சி செயல்அலுவலர் சந்திர கலா, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பெனட் ராஜ், பேரூராட்சி உறுப்பினர் ரிப்பாய், கிராம நிர்வாக அலுவலர் ஜீனா ஜாஸ்மின், வருவாய் அலுவலர் தேவிகா, பொதுமக்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory