» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!

வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

ஸ்ரீரங்கம் பக்தர்கள் தங்கும் விடுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமாக பஞ்சகரை பகுதியில் பக்தர்கள் தங்கும் விடுதி கடந்த 2021 ஆம் ஆண்டு 47 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்படுகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் தங்கிச் செல்ல வசதியாக இது செயல்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சேர்ந்த சாமிநாதன்(67), அவரது மனைவி செண்பகவல்லி(65) மற்றும் மகள்கள் பவானி(47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர். 14-ஆம் தேதி அன்று மேலும் இரண்டு நாட்கள் தங்க அனுமதி கேட்டு தங்கி உள்ளனர். இந்த நிலையில் 19 ஆம் தேதியான நிலையில் அவர்கள் அறையை காலி செய்யாததால் இது குறித்து கேட்க இன்று விடுதி பராமரிப்பாளர்கள் அந்த அறையின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசி உள்ளது. 

உடனே அருகில் இருப்பவர்களை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தபோது சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரும் இறந்த நிலையில் இருந்துள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஸ்ரீரங்கம் போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில் பவானி(42), ஜீவா(37) இருவரும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும் மூத்த மகள் பவானி திருமணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்து ஆகி பெற்றவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தங்களுக்கு வயது மூப்பு ஆகிய நிலையில் தங்களுக்கு பின்னால் தங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நான்கு பேரின் உடல்களை மீட்ட காவல்துறையினர், உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory