» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!

வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

விஜய் குறித்த கேள்விக்கு என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என மதுரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டென்ஷனாக பதில் அளித்தார். 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம், ‘ராமநாதபுரம் தேர்தல் வழக்கு நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கவில்லை. பின்னர், ‘விஜய் கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் கம்பியில், மரத்தில் ஏறுகிறார்கள்.

கூட்டத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லையா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்’ என்றார். 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக நான் அருமையான அறிக்கை விட்டுள்ளேன். அதை படித்து பாருங்கள் என்றார். தவெகவிற்கு இன்னும் பல தலைவர்கள் வருவார்கள் என்று விஜய் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் காரில் ஏறி பெரியகுளத்துக்கு புறப்பட்டு சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory