» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிகரிப்பு!

சனி 20, டிசம்பர் 2025 11:08:57 AM (IST)

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே, தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்தைத் தொட்டு அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில், மீண்டும் ஒரு லட்சத்தை தொடும் அளவுக்கு நாள்தோறும் விலை உயர்ந்து வருகிறது.

வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இன்று காலை வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.226-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.5000 உயர்ந்த நிலையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.26 லட்சத்தை எட்டியிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory