» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் அணி நிர்வாகியிடம் அத்துமீறல்: தவெக மாவட்ட செயலாளர் நீக்கம்!

சனி 20, டிசம்பர் 2025 9:04:34 PM (IST)

மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகாரில் சிக்கிய தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் ஜே.ஜே. செந்தில்நாதன் என்பவர் நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்த நிலையில், விஜய் கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். செந்தில்நாதன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.

கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள பெண் நிர்வாகி ஒருவரது வீட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் சென்று கதவை பூட்டியதாகவும், இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில், அந்தப் பெண்ணுடன் தவெக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்தில் நாதனை தாக்கிய பெண்ணின் உறவினர்கள், அவரை அடுத்த நாள் காலையில் தான் விடுவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தவெக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்..



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory