» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 24, டிசம்பர் 2025 5:26:30 PM (IST)
"அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!
இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்! என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 4 ரவுடிகள் கைது : கஞ்சா, புகையிலை விற்ற 3பேர் கைது!
புதன் 24, டிசம்பர் 2025 3:31:43 PM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: ஓபிஎஸ் திட்டவட்டம்
புதன் 24, டிசம்பர் 2025 11:37:52 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
புதன் 24, டிசம்பர் 2025 10:29:19 AM (IST)

