» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் சஸ்பெண்ட்!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:03:22 AM (IST)

ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலரை சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஷேக் முகமது, அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவிக்கு காவலர் ஷேக் முகமது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அந்த மாணவி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து ரயில்வே போலீசாருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த ரயில் காட்பாடி வந்தபோது, ரயில்வே போலீசார் காவலர் ஷேக் முகமதை கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் மாணவி அளித்த புகாரின்பேரில் காவலர் ஷேக் முகமதை சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவின் முதல் அடிமை திமுகதான்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!
வியாழன் 25, டிசம்பர் 2025 12:09:23 PM (IST)

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்: மோகன் சி லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
வியாழன் 25, டிசம்பர் 2025 8:28:52 AM (IST)

கொலை வழக்கில் 5பேருக்கு சிறை தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
புதன் 24, டிசம்பர் 2025 8:10:41 PM (IST)

ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 24, டிசம்பர் 2025 5:26:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 4 ரவுடிகள் கைது : கஞ்சா, புகையிலை விற்ற 3பேர் கைது!
புதன் 24, டிசம்பர் 2025 3:31:43 PM (IST)

