» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

வியாழன் 25, டிசம்பர் 2025 8:45:54 PM (IST)



கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மன் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலம் அருள் தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோவில் (நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலம்) திருவாதிரை திருவிழா திருக்கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டுஅதிகாலை 03.00 மணிக்கு கணபதி ஹோமம்,அதிகாலை 04.00 மணிக்கு பல்வேறு வகையான அபிஷேகம். பல்வேறு பூஜைகள் நடந்தது அதிகாலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் திருக்கொடியேற்றம். நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை,, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் மூலவர் ஸ்ரீவீரபாண்டீஸ்லரர் , ஸ்ரீஅழகிய கூத்தர்,, ஸ்ரீசிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.. இத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் தீபாரதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. 

சிகர நிகழ்ச்சியான ஜனவரி 3ஆம் தேதி திருவாதிரை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், நாலு மணிக்கு சுவாமி அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளல், நாலு முப்பது மணிக்கு நடராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம், நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தாண்டவ தீபாரதனை நடைபெறுகிறது, காலை 7:00 மணிக்கு காலை பூஜை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

காலை 9 மணிக்கு பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிய சத்யஞான பரமாச்சியார் சுவாமிகள் பங்கேற்று திருவாதிரை திருவிழா அருளாசி வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா, ஒரு மணிக்கு மதிய பூஜை, மாலை 6:00 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு சேர்க்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர். மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory