» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை: கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு
சனி 27, டிசம்பர் 2025 10:08:56 AM (IST)
வெள்ளி விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் கிலோவுக்கு ரூ.52 ஆயிரம் அதிகரித்து உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி இவற்றின் விலை தாறுமாறாக எகிற தொடங்கி உள்ளது. சமீபத்தில், தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோன்று வெள்ளி விலையும் கிலோ ரூ.2½ லட்சத்தை கடந்துள்ளது.
தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 890-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9-ம், கிலோ ரூ.9 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.254-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் கிலோவுக்கு ரூ.52 ஆயிரம் அதிகரித்து உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒருகிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தலைமை செயலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட முயற்சி : சென்னையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 12:26:41 PM (IST)

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: சிவகாசி அருகே சோகம்!
சனி 27, டிசம்பர் 2025 12:00:34 PM (IST)

மார்கழியில் மக்களிசை: பறை இசைத்து கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்!
சனி 27, டிசம்பர் 2025 10:58:05 AM (IST)

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

இரட்டை பசுமாடு சின்னம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் : தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
சனி 27, டிசம்பர் 2025 10:14:28 AM (IST)

டிச.29ல் இ.எஸ்.ஐ.சி., வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்!
சனி 27, டிசம்பர் 2025 8:44:30 AM (IST)


