» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: சிவகாசி அருகே சோகம்!

சனி 27, டிசம்பர் 2025 12:00:34 PM (IST)

சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரத்தை சேர்ந்த பெண் காவலர் ராஜேஸ்வரி. இவரது மகள் கமலிகா (9). ராஜேஸ்வரியின் சகோதரி மகளான ரிஷிகாவும் (4), கமலிகாவும் வீட்டின் முன்புறம் உள்ள கேட்டில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கேட் சரிந்து, சிறுமிகள் இருவரின் மீது விழுந்தது. கேட் விழுந்ததில், சிறுமிகள் இருவரும் அதில் சிக்கிக்கொண்டனர்.

கனமான கேட் என்பதால், சிறுமிகளால் மீண்டு வெளியே வர முடியவில்லை. கேட் விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால், சிறுமிகள் உடனடியாக மீட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இரு பிஞ்சி உயிர்களை பறிகொடுத்த உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory