» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூரில் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்!

சனி 27, டிசம்பர் 2025 5:00:20 PM (IST)

தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜனவரி 3-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் - காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (11017), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12635), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12637), ஜனவரி 2-ம்தேதி முதல் பிப்ரவரி 01-ம்தேதி வரை கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12641), ஜனவரி 1-ம்தேதி முதல் ஜனவரி 29-ம்தேதி வரை மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் (12651),

ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை சென்னை எழும்பூர் - திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12653), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை சென்னை எழும்பூர் - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12661), ஜனவரி 1-ம்தேதி முதல் ஜனவரி 30-ம்தேதி வரை சென்னை எழும்பூர் - நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12667), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை தாம்பரம் - ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16103), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை காரைக்கால் - தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16176),

ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை சென்னை எழும்பூர் - மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16179), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை கன்னியாகுமரி - பனாரஸ் செல்லும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16367), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16865), டிசம்பர் 31-ம்தேதி 2025 முதல் ஜனவரி 31-ம்தேதி வரை ஜோத்பூர் - திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20481), ஜனவரி 6-ம்தேதி முதல் ஜனவரி 31-ம்தேதி வரை ராமேசுவரம் - பிரோஸ்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20497),

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 1-ம்தேதி வரை செங்கோட்டை - சென்னை எழும்பூர் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் (20682), டிசம்பர் 31-ம்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ம்தேதி வரை செங்கோட்டை- தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20684), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை தாம்பரம் - நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலும் (20691), ஜனவரி 2-ம்தேதி முதல் பிப்ரவரி 01-ம்தேதி வரை புவனேஸ்வர் - ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20849), ஜனவரி 6-ம்தேதி முதல் பிப்ரவரி 28-ம்தேதி வரை புவனேஸ்வர் - புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20851),

டிசம்பர் 31-ம்தேதி முதல் ஜனவரி 30 -ம்தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் - மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22101), டிசம்பர் 31-ம்தேதி முதல் ஜனவரி 28-ம்தேதி வரை புதுச்சேரி- புதுடெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22403), டிசம்பர் 31-ம்தேதி முதல் ஜனவரி 28-ம்தேதி வரை ராமேசுவரம் - பனாரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22535), டிசம்பர் 31-ம்தேதி முதல் பிப்ரவரி 01-ம்தேதி வரை ராமேஸ்வரம் - அயோத்தி கான்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22613), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 1-ம்தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22623),

ஜனவரி 1-ம்தேதி முதல் ஜனவரி 29-ம்தேதி வரை மதுரை – பிகானேர் அனுவ்ரத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22631), ஜனவரி 1-ம்தேதி முதல் பிப்ரவரி 02-ம்தேதி வரை தாம்பரம் – நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22657), ஜனவரி 1-ம்தேதி முதல் ஜனவரி 29-ம்தேதி வரை ஜோத்பூர் – மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22673), ஜனவரி 1-ம்தேதி முதல் பிபரவரி 2-ம்தேதி வரை சென்னை எழும்பூர் – சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22153),மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory