» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெ., மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பெண் விரட்டியடிப்பு!

சனி 10, ஜனவரி 2026 5:41:14 PM (IST)

ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பெண்ணை அதிமுகவினர் வெளியேற்றினர்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/JayaDaughter_1768047125.jpgதமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு இன்று அதிமுக அலுவலகத்திற்கு ஜெயலட்சுமி என்ற பெண் வருகை தந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் ஜெயலட்சுமி கூறினார். அப்போது, அதிமுக நிர்வாகிகளுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory