» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் : அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!

ஞாயிறு 11, ஜனவரி 2026 10:41:15 AM (IST)

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான அரசாணை 354 மறுவரையறை, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரை நேரடியாக சந்தித்தபோது, இது தொடர்பாக நிதித்துறை அமைச்சருடன் வருகிற 19-ந்தேதி துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு நடத்தியதைப் போல மீண்டும் ஒத்துழையாமை இயக்கம், 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் இறுதியாக காலவரையற்ற பணி புறக்கணிப்பு என பல கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என கூட்டமைப்பின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory