» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!

புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)



நாகர்கோவிலில் அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடக்கு மாநகர அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி மாமன்ற உறுப்பினரும் வடக்கு மண்டல செயலாளருமான ஸ்ரீலிஜா தலைமையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ. நாஞ்சில் முருகேசன் ஏற்பாட்டில் வடசேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட புதுமண தம்பதிகளுக்கு பட்டுபடவை, பட்டுவேட்டி, பொங்கல் பானை கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் பொங்கல் சீர் வரிசைகள் வழங்கி சிறப்பித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory