» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு: கூட்டம் அலைமோதல்!

ஞாயிறு 18, ஜனவரி 2026 8:25:24 AM (IST)

பொங்கல் விடுமுறை எதிரொலியாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை காரணமாக ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், சில நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று திரும்பினர். இதனால், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால், பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரையும், விளை மீன், ஊளி, பாறை ஆகிய ரக மீன்கள் ரூ. 500 முதல் ரூ. 700 வரையும், சூப்பர் நண்டு ரூ. 900 வரையும், வங்கனபாறை மீன் ரூ. 140 வரையும், கேரை, சூரை மீன்கள் ரூ. 200 வரையும் விற்பனையானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory