» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி பவளவிழா: மேலாளர் வாழ்த்து!

ஞாயிறு 18, ஜனவரி 2026 12:01:41 PM (IST)



தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தற்போதைய நிர்வாகியும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி நீதித்துறையில் 50 ஆண்டு கால சேவையை பாராட்டி நடைபெற்ற பவளவிழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெயராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகியும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணியின் நீதித்துறையில் 50 ஆண்டு சேவையை பாராட்டி பவளவிழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கழக கலைஅரங்கில் வைத்து நடைபெற்ற பவளவிழா நிகழ்வில் நீதிபதி ஜோதிமணி தம்ப தியினருக்கு சி.எஸ்.ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளரும், நாசரேத் மர்காஷிஸ் கல் லூரி மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியின் தாளாளருமாகிய காபிரியேல் தேவயிரக்கம் ஜெயராஜன் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை சென்னை நக்கீரர்தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு டாக்டர் கலைஞர் கட்டுமான பணி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம், மலேசிய முத்தமிழ் சங்கத்தினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory