» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான்கு வழிச்சாலையில் தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

திங்கள் 19, ஜனவரி 2026 8:24:39 AM (IST)



சாத்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.

நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவராக அன்புசேகர் என்பவரும், கண்டக்டராக கந்தசாமி என்பவரும் பணியில் இருந்தனர்.

இந்த பஸ் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடுவப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பஸ்சில் இருந்து புகை வெளியேற தொடங்கியது. இதனை பார்த்த டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, பயணிகளை கீழே இறங்குமாறு கூறினார். உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு இறங்கினர். சிறிதுநேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் மளமளவென பஸ் முழுவதும் தீ பரவியது.

உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளின் செல்போன்கள் மற்றும் உடைமைகள் தீயில் கருகின. தொடர்ந்து பஸ்சில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஸ் தீப்பிடித்து எரிந்ததால் நான்கு வழிச்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வெளியூர் செல்லும் வாகனங்களில் வந்த பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory