» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்!

திங்கள் 19, ஜனவரி 2026 10:21:51 AM (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில், 71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/kcvenugopal_1768798421.jpgதமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டிருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பட்டியல் வெளியிடப்படவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை கிழக்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கு கோபி, வட சென்னை கிழக்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கு தில்லிபாபு, தென் சென்னை மத்திய ஜோதி பொன்னம்பலம், தென் சென்னை கிழக்கு விஜயசேகர், தென் சென்னை மேற்கு திலகர், செங்கல்பட்டு வடக்கு செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு பிரபு ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory