» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாமனாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது : குடும்பத்தகராறில் வெறிச்செயல்!

செவ்வாய் 20, ஜனவரி 2026 7:59:35 AM (IST)

கயத்தாறில் குடும்பத்தகராறில் மாமனாரை அரிவாளால் சரமாரி வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (55). மாற்றுத்திறனாளியான இவர் விவசாயமும் செய்து வந்தார். மேலும் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் செல்வி (25) என்பவருக்கும், முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான கருப்பசாமி (30) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 

பின்னர் புதுமண தம்பதி, உலகநாதனுடன் சேர்ந்து மும்பைக்கு சென்று இட்லி வியாபாரம் செய்தனர். அங்கு சென்ற சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக செல்வி கோபித்துக் கொண்டு வெங்கடாசலபுரத்திற்கு வந்துவிட்டார். இதனால் மனமுடைந்த கருப்பசாமியும் பாப்பாக்குடிக்கு வந்தார்.

மனைவியை தன்னுடன் குடும்பம் நடந்த வருமாறு கருப்பசாமி அழைத்தார். ஆனால் ெசல்வி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களுக்கு இடையே ெபாங்கல் விடுமுறைக்கு உலகநாதனும் ஊருக்கு வந்துவிட்டார். நேற்று காலையில் உலகநாதன், செல்வி ஆகியோர் கயத்தாறுக்கு சென்றனர். அங்குள்ள ஜவுளிக்கடையில் செல்வியை விட்டுவிட்டு, உலகநாதன் மட்டும் அருகில் இருந்த ஒரு வங்கிக்கு சென்றார். இதை அறிந்த கருப்பசாமியும் கயத்தாறுக்கு சென்றார்.

திருநீலகண்டஈஸ்வரர் கோவில் முன் உலகநாதனை வழிமறித்த கருப்பசாமி, செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் உலகநாதனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கையால் தடுக்க முயன்றபோது உலகநாதனின் வலது கை விரல் துண்டானது. இதனால் அவர் அலறித்துடித்தார்.

பின்னர் கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று கருப்பசாமியை பிடித்தனர். மேலும் கயத்தாறு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கருப்பசாமி ேபாலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

உலகநாதன் மற்றும் துண்டான அவரது கை விரல் ஆகியவற்றை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து, கருப்பசாமியை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory