» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் மிரட்டுகிறாா்கள் : கி.வீரமணி பேட்டி

வெள்ளி 23, ஜனவரி 2026 10:45:12 AM (IST)

தமிழகத்தில் திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐயை காண்பித்து மிரட்டுகிறாா்கள் என்று தி.க. தலைவா் கி.வீரமணி கூறினார்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு வெற்றி விழா, பெரியாா் உலகத்துக்கு நிதியளிப்பு விழாக் கூட்டம் நாகா்கோவிலில் ஒழுகினசேரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.க. மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தி.க. தலைவா் கி. வீரமணி கலந்துகொண்டு பேசினாா். இதில், மாவட்டச் செயலா் வெற்றிவேந்தன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் கி. வீரமணி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும். திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சிலா் நினைக்கின்றனா். 

அது, ஒருபோதும் நடக்காது. திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐயை காண்பித்து மிரட்டுகிறாா்கள். தமிழகத்தைப்போலவே கேரளம், கா்நாடகத்திலும் ஆளுநா்களால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆளுநா் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறார் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory