» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

சனி 24, ஜனவரி 2026 8:11:26 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் சரகப் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை, தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கபாண்டி (70) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து தட்டிக்கேட்ட அச்சிறுமியின் பெற்றோருக்கு, முதியவரின் மகளான தூத்துக்குடியைச் சேர்ந்த வேதசெல்வி (42), மகன் ராஜா (34) ஆகியோர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் மகளிர் போலீசார் முதியவர் உள்பட 3 பேர் மீது போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிந்தனர். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2-இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரத்து, தங்கபாண்டிக்கு, இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், வேதசெல்வி, ராஜா ஆகியோருக்கு தலா ரூ.5000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினர், அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory