» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாட்டில் என்ன நடக்கிறது என்றே விஜய்க்கு தெரியவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!

புதன் 4, பிப்ரவரி 2026 3:43:19 PM (IST)

ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். 

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலை தொங்கி காட்சியளித்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். 

மேலும் அவர் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர். தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கும்.

நாட்டை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவும் தேசிய அளவிலான கட்சி. கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் விஜய். நாட்டில் என்ன நடக்கிறது என்றே த.வெ.க. தலைவர் விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும்.

அ.தி.மு.க. ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும்? விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை. விஜய் நேரில் செய்தியாளர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியும். ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார்.

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை. சசிகலா விவகாரம் குறித்து ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்தி விட்டேன். ஜெயலலிதாவின் ஆன்மா துரத்தியதால் தான் மனோஜ் பாண்டியன் தி.மு.க.விற்கு சென்று விட்டார். எங்கள் மீது குறை கூற ஒன்றும் இல்லை, எந்த தவறும் செய்யாத அதிமுக மீது குறைகளை முதல்வர் தேடிக்கொண்டிருக்கிறார்.  பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் என மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory