» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டாடா ஆலையில் தயாரான முதல் கார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:40:59 PM (IST)

ராணிப்பேட்டை டாடா கார் உற்பத்தி ஆலையில் உற்பத்தியான முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு காரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் 1,231 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை டாடா நிறுவனம் மேற்கொண்டது. அந்த தொழிற்சாலைக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.9,000 கோடி முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கார் உற்பத்தி ஆலையின் முதல் அலகு இன்று திறந்து வைக்கப்பட்டது. டாடா கார் உற்பத்தி ஆலையின் முதல் அலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து டாடா கார் உற்பத்தி ஆலையில் முதல் அலகில் உற்பத்தியான முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு காரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்: தலைமை தேர்தல் ஆணையம்..!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:27:33 PM (IST)

தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)

கொடிக் கம்பங்கள் வழக்கு: தூத்துக்குடி, நெல்லை உட்பட 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:48:37 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST)

