» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி - குருவிகுளம் யூனியன்கள் மறுசீரமைப்பு : 12 கிராமங்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைப்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:05:00 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் குருவிகுளம் யூனியன்களை மறுசீரமைத்து தமிழக அரசு இறுதி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகள் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இளையரசனேந்தல் உள்வட்டத்தில் உள்ள 12 வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டு, அதன் வருவாய்த்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.
வருவாய்த்துறை ரீதியாகத் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டாலும், உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இந்த 12 கிராம ஊராட்சிகளும் தற்போதைக்குத் தென்காசி மாவட்டத்திலேயே தொடரும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னரே, இவற்றின் உள்ளாட்சி நிர்வாகச் சீரமைப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும்.
கோவில்பட்டி யூனியனில் உள்ள 50 ஊராட்சிகளின் விவரம்:
மறுசீரமைப்பிற்குப் பிறகு கோவில்பட்டி யூனியனில் இடம்பெற்றுள்ள 50 பஞ்சாயத்துக்கள் பின்வருமாறு:
ஆவல்நத்தம், அய்யாக்கோட்டையூர், சத்திரப்பட்டி, சிதம்பராபுரம், சின்னமலைக்குன்று.
ஈராச்சி, இடைசெவல், இளம்புவனம், இலுப்பையூரணி, இனாம் மணியாச்சி.
கடலையூர், கீழஈரால், கீழவிப்பட்டி, கொடுக்காம்பாறை, குலசேகரபுரம்.
லிங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மந்தித்தோப்பு, மீனாட்சிபுரம், மேல ஈரால்.
மூப்பன்பட்டி, முடுக்கும்மீண்டான்பட்டி, நாலாட்டின்புதூர், பாண்டவர்மங்கலம், ஆர்.வெங்கடேஸ்வரபுரம்.
செம்பூதூர், சிந்தலக்கரை, சிவந்திப்பட்டி, சுரைக்காய்ப்பட்டி, டி.சண்முகபுரம்.
தீத்தாம்பட்டி, திட்டங்குளம், தோணுகால், துறையூர், உருளைக்குடி.
ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, வில்லிச்சேரி, முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி.
வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி.
சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், ஜமீன் தேவர்குளம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:53:08 PM (IST)

மீண்டும் வருவோம்; சாதனைகளை மிஞ்சுவோம்: பேரவையில் முதல்வர் நெகிழ்ச்சி உரை!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:27:37 PM (IST)

தி.மு.க. நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழல்: விஜய் கண்டனம்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:22:06 PM (IST)

டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அதிரடி வெற்றி - புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:19:20 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீடு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:09:46 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்க முதல்வர் அனுமதிக்க மாட்டார் : துரை வைகோ உறுதி
வெள்ளி 20, பிப்ரவரி 2026 7:59:18 AM (IST)

