» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-1 மாணவி, தாயாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: ஆட்டோ ஓட்டுநர் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:00:06 AM (IST)
சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக, பிளஸ்-1 மாணவியையும் அவரது தாயாரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி ஞானமலர் (45). இவர்களது மகள் மரிய ஜெபராணி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 பயின்று வருகிறார். குடும்பப் பிரச்சினை காரணமாக ஞானமலர் தனது கணவரைப் பிரிந்து, மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையில், பூச்சிக்காடு விலக்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிங்கதுரை (65) என்பவருக்கும், மாணவி மரிய ஜெபராணிக்கும் இடையே ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஞானமலரும் அவரது மகள் மரிய ஜெபராணியும் வெளியூர் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளனர். பூச்சிக்காடு விலக்கு பகுதியில் அவர்கள் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அங்கு ஆட்டோவுடன் நின்றிருந்த லிங்கதுரையிடம், "ஏன் என் மகளுடன் தகராறு செய்கிறீர்கள்?" என ஞானமலர் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லிங்கதுரை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஞானமலர் மற்றும் மரிய ஜெபராணி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, தனது ஆட்டோவிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இசக்கித்துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் லிங்கதுரையை போலீசார் கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஊருணியில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப சாவு : நண்பர்களுடன் குளித்தபோது சோகம்!
திங்கள் 16, மார்ச் 2026 8:30:48 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் கோடை வெப்பத்தைத் தணிக்க சிறப்பு வசதிகள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 16, மார்ச் 2026 7:53:48 AM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு: ஏப். 23-ல் வாக்குப்பதிவு - மே 4ல் ரிசல்ட்..!
ஞாயிறு 15, மார்ச் 2026 6:16:47 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:35:31 AM (IST)

