» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்

சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தான் வெளியேறப்போவதாகப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று அக்கட்சியின் நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அக்கட்சியில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்துச் சரத்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பாஜவில் இருந்து வெளியேறப் போவதாகக் கூறப்படுவது ஒரு வதந்தி. கட்சியில் தமக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனக் கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

நாளை நடைபெறவுள்ள ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். இதில் அரசியல் மாற்றங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம், பாஜகவில் தான் தொடர்ந்து நீடிப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory