» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நாளில் 3 பேருக்குச் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:15:09 AM (IST)
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 3 வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் என்பவர் அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (44) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குடும்பத் தகராறில் பெண்ணை இழிவாகப் பேசியதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.பொது இடத்தில் அநாகரிகமாக நடந்தவருக்கு ஓராண்டு சிறை
கீழசெய்தலை பகுதியைச் சேர்ந்த ரெஸ்லின் அன்பு மேரி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளதுரை என்பவர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொது இடத்தில் பெண்ணை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக, இவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தவறான நோக்கில் அணுகியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
சக்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெண்ணைத் தவறான நோக்கத்துடன் அணுகி அச்சுறுத்திய குற்றத்திற்காக, இவருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 4,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 3 முக்கிய வழக்குகளிலும் ஓட்டப்பிடாரம் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் நேற்று சனிக்கிழமை இறுதித் தீர்ப்பை வழங்கினார்.
பெண்கள் மீதான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி: வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு!
சனி 28, மார்ச் 2026 5:27:45 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல்!
சனி 28, மார்ச் 2026 4:23:58 PM (IST)

