» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்மநாபபுரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

ஞாயிறு 29, மார்ச் 2026 9:52:03 AM (IST)



பத்மநாபபுரம் தொகுதி அமைச்சர் மனோ தங்கராஜிடமிருந்து பறிக்கப்பட்டதை வரவேற்று திமுகவினரே பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, தற்போதைய அமைச்சர் மனோ தங்கராஜிடமிருந்து பறிக்கப்பட்டு, கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை முன்னிட்டு, திருவிதாங்கோடு நகர திமுகவினர் பட்டாசு வெடித்துத் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

வருகிற 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதில், கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி, இந்த முறை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சருக்குத் தொகுதி மீண்டும் ஒதுக்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருவிதாங்கோடு நகர திமுகவினர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். திருவிதாங்கோடு சந்திப்புப் பகுதியில் திரண்ட திமுகவினர், பட்டாசுகளை வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சொந்தக் கட்சியின் அமைச்சருக்கே தொகுதி மறுக்கப்பட்டதை அக்கட்சியினரே கொண்டாடுவது குமரி மாவட்ட அரசியலில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory