» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனு தள்ளுபடி: இந்து முன்னணி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:05:02 PM (IST)
இந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர்களின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 46 தனித்தொகுதிகள் உள்ளன.இந்து பட்டியல் சமூக மக்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய இந்த தொகுதிகளில் கிறிஸ்தவ மற்றும் வேற்று மதத்திற்கு மாறியவர்கள், அதன் வழிபாட்டு முறையை தொடர்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ பெயர்களை வைத்துள்ளவர்கள், கிறிஸ்தவ விழாக்களை கொண்டாடுபவர்கள் சிலர் இந்து பட்டியல் சமூகத்தவர் என போலியாக சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் தனித்தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரிகிறது.
தனித்தொகுதி என்பது இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளைப் பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டத்தையும் அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்திற்கு மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று இந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
சிறுவயதில் இந்துவாக இருந்தபோது இந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள் இடைக்காலத்தில் மதம் மாறியதை மறைத்து பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
எனவே தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து அவர்கள் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்யுமாறு இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தனித் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரின் சாதிச் சான்றிதழ் குறித்து எழும் ஆட்சேபனைகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கும் வருவாய் வட்டாட்சியர்கள், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் கண்காணித்து, வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் : மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சேரன்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:10:13 PM (IST)

தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:44:06 PM (IST)

விஜய் மீது வழக்கு: டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 3:30:09 PM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)

