» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் : மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சேரன்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:10:13 PM (IST)

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சியினர் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்று இயக்குநர் சேரன் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. இயக்குநர் சேரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "சீமானும், அவரது தம்பி - தங்கைகளும் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மக்களின் பணம் சூறையாடப்படுவதைத் தடுத்து, அதை நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்த ஆலோசனை வழங்க இவர்களின் குரல் அவசியமானது. மேடைகளில் இவர்களின் முழக்கம் எதிர்கால வாழ்வியலைப் பற்றியே இருப்பதால், இவர்கள் சட்டப்பேரவையில் இருந்தே ஆக வேண்டும்."
கடந்த கால அரசுகள் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை விடுத்து, இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகச் சேரன் விமர்சித்துள்ளார். தேர்தலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, அதை நூறு மடங்காகத் திரும்ப எடுக்கத் துடிக்கும் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்.
போதைப் பொருள் புழக்கம், வன்முறை மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தைத் தட்டிக்கேட்க அழுத்தமான குரல்கள் தேவை. அந்த மேய்ப்பர்களாக நாம் தமிழர் கட்சியினர் இருப்பார்கள். தலைமுறை தலைமுறையாகப் பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்களைப் புறந்தள்ளிவிட்டு, இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"நம் பிள்ளைகள் வாரிசு அரசியலை வீழ்த்தி, நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சிந்திப்போம், நம்மை நாமே ஆள்வோம். கைகட்டி அடிமைகளாக நிற்கப் போகிறோமா அல்லது நம் பிள்ளைகளுக்கு நல்வழிகாட்டி தலைவர்களாய் வாழப் போகிறோமா?" என இயக்குநர் சேரன் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனு தள்ளுபடி: இந்து முன்னணி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:05:02 PM (IST)

தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:44:06 PM (IST)

விஜய் மீது வழக்கு: டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 3:30:09 PM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)

