» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல் துறையின் அனுமதி உத்தரவில் அதிருப்தி: தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:42:19 AM (IST)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த அவரது பிரசாரப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் முக்கியத் தொகுதிகளான வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று (திங்கள்கிழமை) பிரசாரம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காகக் காவல் துறையிடம் உரிய அனுமதி கோரி அக்கட்சியின் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.காவல் துறையினர் வழங்கிய அனுமதி உத்தரவில், கடுமையான நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. வில்லிவாக்கம் - மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை. தி.நகர்: மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை. இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே பயணிப்பதற்கும், பிரசாரம் செய்வதற்கும் வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனத் தவெக தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு மணி நேர இடைவெளியில் வில்லிவாக்கத்தில் இருந்து தி.நகருக்குச் சென்று பிரசாரத்தைத் தொடங்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என அக்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறைந்த கால அவகாசத்தில் வாக்காளர்களை முழுமையாகச் சந்திக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய சென்னை பிரசாரப் பயணத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகத் தவெக தலைமை அறிவித்துள்ளது. இதனால் உற்சாகத்துடன் காத்திருந்த அக்கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விருப்ப மனு கட்டணத்தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:35:03 AM (IST)

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு தோல்வி பயமே காரணம்: கனிமொழி கருத்து!
புதன் 8, ஏப்ரல் 2026 10:26:42 AM (IST)

தேர்தல் பொது பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பங்கேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 10:13:57 AM (IST)

வேன் மோதி இளம்பெண் பலி: பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் படுகாயம்!
புதன் 8, ஏப்ரல் 2026 8:30:32 AM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இருவழிப் பாதை: கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:47:33 PM (IST)

