» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை: மார்த்தாண்டம் அருகே சோகம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:22:09 PM (IST)
மார்த்தாண்டம் அருகே காதலி பேசாத காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கேரளா மாநிலத்தில் தேன் பெட்டி தொழில் செய்து வந்தார். தற்போது ஈஸ்டர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
ஊருக்கு வந்த நாள் முதல் அபி யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து வந்துள்ளார். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், சமீபகாலமாக அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அபி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு வந்த அபி, உணவு சாப்பிட மறுத்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அபி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேச்சிப்பாறை போலீசார், அபியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ஏப். 15ல் பிரதமருடன் பிரசாரம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:39:23 PM (IST)

நான் ஆட்சிக்கு வந்தால் மெரினா நினைவிடங்களை அகற்றுவேன்: சீமான் ஆவேசப் பேச்சு
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:25:10 PM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : களம் காணும் முக்கியத் தலைவர்கள்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:10:39 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:43:23 PM (IST)

வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த சின்னத்திரை நடிகை திடீர் தற்கொலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:26:37 PM (IST)

