» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதி (24). இவரும், தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஓராண்டாக இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் சங்கராபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சுமார் 4 மணி அளவில், சுரேஷ்குமார் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் ரேவதியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ரேவதி, அவரது தாயார் மற்றும் 10 மாதக் குழந்தை ஆகியோரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.
சாமர்த்தியமாகச் செயல்பட்ட ரேவதியும் அவரது தாயாரும், உடனடியாக வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு, குழந்தையுடன் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா ஸ்கூட்டர் உள்ளிட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
வாகனங்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியையும் குழந்தையையும் உயிரோடு எரிக்க முயன்ற இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

உளவுத்துறை ஐ.ஜி-யாக அஸ்ரா கர்க் நியமனம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 13, மே 2026 3:44:08 PM (IST)


