» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெற்றி மீது 100% நம்பிக்கை உள்ளது: சொந்த ஊரில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி பேட்டி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 10:51:31 AM (IST)

வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்; இந்தத் தேர்தலில் நான் 100% நம்பிக்கையோடு உள்ளேன்," என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இறுதி இரண்டு நாட்கள் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் நாளான இன்று, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்தார்.
நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், பொதுமக்களோடு ஒருவராக வரிசையில் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ராதா, மகன் மிதுன் மற்றும் மருமகள் திவ்யா ஆகியோரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: "வாக்காளர்கள் அனைவரும் எவ்விதத் தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து நான் 100% நம்பிக்கையோடு உள்ளேன்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வரிசையில் நின்ற நடிகர் அஜித்குமார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:20:49 AM (IST)

யாருக்கு ஓட்டு என்பதை வெளிப்படுத்தினால் சிறை : தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)

தூத்துக்குடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: அமைச்சர் கீதா ஜீவன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:03:39 AM (IST)

தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும்!
புதன் 22, ஏப்ரல் 2026 5:44:03 PM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

