» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!

வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)



திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மானாடு தண்டுபத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊரான மானாடு தண்டுபத்து பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அவர் தனது சொந்த ஊரான ஆறுமுகநேரியில் உள்ள காமராஜ் சோமசுந்தரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் வந்து நிலவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருச்செந்தூர் தொகுதியில் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் காலையிலேயே வாக்களித்து முடித்துள்ள நிலையில், மதிய நேரத்திலும் வாக்குப்பதிவு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory