» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் விபத்து: மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு!

ஞாயிறு 26, ஏப்ரல் 2026 11:02:07 AM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே பைக் விபத்தில், காயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நல்ராஜபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (21), சிவகணேஷ் (19) மற்றும் இசக்கிராஜா (20) ஆகிய மூன்று நண்பர்களும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆழ்வார்திருநகரி அரசாங்க நகர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த குத்துக்கல் மற்றும் கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முத்துப்பாண்டிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்தில் காயம் அடைந்த மற்ற இருவரையும் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இசக்கிராஜா (20) சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதன் மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மற்றொரு இளைஞரான சிவகணேஷ் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory