» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வன்​முறை வெறி​யாட்​டத்​தில் ஈடு​பட்ட திமுக​வினர் மீது நடவடிக்கை: வேல்முருகன் கோரிக்கை

திங்கள் 27, ஏப்ரல் 2026 11:20:15 AM (IST)

பொது​மக்​கள் மீது வன்​முறை வெறி​யாட்​டத்​தில் ஈடு​பட்ட திமுக​வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தமிழக வாழ்​வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் அவசர மாநில செயற்​குழு கூட்​டம் சென்னை​யில் நேற்று நடை​பெற்​றது. பின்​னர், நிருபர்​களிடம் கட்​சி​யின் நிறு​வனத் தலை​வர் தி.வேல்​முரு​கன் கூறிய​தாவது: நடந்து முடிந்த தேர்தலில், தவாக சார்​பில் நெய்​வேலி தொகு​தி​யில் திரு​மால்​வளவன், குறிஞ்​சிப்​பாடி தொகு​தி​யில் கண்​ணன் ஆகியோரை வேட்​பாளர்​களாக நிறுத்​தி​யிருந்​தேன்.

2 தொகு​தி​களி​லும் வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்ள சூழ்​நிலை​யில், திமுக தனது உளவுத்துறை மூல​மாக தெரிந்​து​கொண்​டு, இத்தொகு​தி​களில் பல இடங்​களில் வன்​முறை வெறி​யாட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது. இதனால் வேட்​பாளர்​களும், தொண்​டர்​களும், பொது​மக்​களும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இரவு 8 மணிக்கு மேல் பூத்​களை கைப்​பற்​றி, வாக்​களித்​துள்​ளனர். ஆனால், இது​வரை ஓர் இடத்​தில் கூட குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட​வில்​லை. அதற்கு நேர்​மாறாக, எங்​கள் கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் மீது வழக்​குப் பதிந்​துள்​ளனர்.

எனவே, நீதி கிடைக்​க​வும், குற்​ற​வாளி​களைத் தண்​டிக்​க​வும், அப்​பாவி​கள் மீது போடப்​பட்ட வழக்​கு​களை ரத்து செய்​ய​வும் வேண்​டும். இந்​திய தேர்​தல் ஆணை​யம், தமிழக தேர்​தல் ஆணை​யம், தமிழக காவல் துறை டிஜிபி, உள்​துறை செயலர், உளவுத் துறை டிஜிபி ஆகியோர் எனக்கு நீதி வழங்க வேண்​டும். எங்​கள் கட்சி தொண்​டர்​கள், ஆதர​வளித்​தவர்​களுக்கு ஏற்​பட்ட அநீ​திக்கு எதி​ராக நீதி கேட்​கும் நடவடிக்​கை​யில் விரை​வில் ஈடு​படு​வேன். இவ்வாறு அவர் கூறி​னார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory