» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் த.வெ.க. பேனர் கிழிப்பு: திமுக பிரமுகர் கைது
புதன் 6, மே 2026 4:59:53 PM (IST)
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வாழ்த்துப் பேனரைக் கிழித்த புகாரில், திமுக பிரமுகரும் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளருமான சுமன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் நிர்வாகிகள் தூத்துக்குடி நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வெற்றி வாழ்த்துத் தெரிவித்து டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.
தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து த.வெ.க. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேனரைச் சேதப்படுத்தியது மட்டக்கடை தட்டார் தெருவைச் சேர்ந்த சுமன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சுமன், திமுகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.
இவர் திமுக பிரமுகர் பில்லா ஜெகனின் தம்பி ஆவார். மேலும், த.வெ.க. முன்னாள் நிர்வாகியும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான அஜிதா ஆக்னலின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்: இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 7:42:28 PM (IST)

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு: ஆட்டோ-டெபிட் வசதியும் அறிமுகம்!
ஞாயிறு 17, மே 2026 11:42:15 AM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)

மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்தக் கூடாது : ஸ்ரீநாத் எம்எல்ஏ பரபரப்பு அறிக்கை!
ஞாயிறு 17, மே 2026 9:58:14 AM (IST)

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு : ஒரு கிலோ ரூ.1,600-க்கு விற்பனை!
ஞாயிறு 17, மே 2026 8:47:41 AM (IST)



இதுமே 7, 2026 - 07:16:52 PM | Posted IP 172.7*****