» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்: முன்பதிவு நாளை தொடக்கம்!
வியாழன் 7, மே 2026 11:24:23 AM (IST)
கோடை விடுமுறையை முன்னிட்டு நிலவும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் கால அட்டவணை:
திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி (வண்டி எண்: 06031)
இயக்கப்படும் நாட்கள்: மே 13, 20, 27 (புதன்கிழமை).
நேரம்: திருவனந்தபுரத்தில் காலை 11:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03:00 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண்: 06032)
இயக்கப்படும் நாட்கள்: மே 14, 21, 28 (வியாழக்கிழமை).
நேரம்: வேளாங்கண்ணியில் மதியம் 12:45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 05:45 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.
முன்பதிவு விவரம்: இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8:00 மணிக்கு தொடங்க உள்ளது. பயணிகள் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் வாயிலாகத் தங்களது பயணத்தைச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் மீது பொறாமை? ஸ்டாலினை சந்தித்தது ஏன்? விமர்சனங்களுக்கு ரஜினி விளக்கம்!
ஞாயிறு 17, மே 2026 8:10:37 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்: இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 7:42:28 PM (IST)

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு: ஆட்டோ-டெபிட் வசதியும் அறிமுகம்!
ஞாயிறு 17, மே 2026 11:42:15 AM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)

மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்தக் கூடாது : ஸ்ரீநாத் எம்எல்ஏ பரபரப்பு அறிக்கை!
ஞாயிறு 17, மே 2026 9:58:14 AM (IST)


