» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: சென்னையில் பரபரப்பு!
சனி 16, மே 2026 5:50:47 PM (IST)

சென்னையில் வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்து வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா செடியைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் ராஜ் பிரண்டோ (வயது 35). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இவர் தனது வீட்டின் பால்கனி மற்றும் மாடிப் பகுதியில் யாருக்கும் தெரியாத வண்ணம் கஞ்சா செடி ஒன்றை நட்டு வளர்த்து வந்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித சந்தேகமும் வராதவாறு, அந்தச் செடியைச் சுற்றி துணிகளைக் கட்டி மிகவும் ரகசியமாக மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. செடி நன்றாக வளர்ந்து அதில் பூக்கள் பூக்கத் தொடங்கிய நிலையில், கஞ்சா பூக்களிலிருந்து ஒருவித வித்தியாசமான கடுமையான வாசனை அப்பகுதி முழுவதும் வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார், இது குறித்து உடனடியாகப் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்குத் ரகசியத் தகவல் அளித்தனர். பொதுமக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எட்வின் ராஜ் பிரண்டோவின் வீட்டில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பால்கனியில் துணிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா செடியை வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த கஞ்சா செடியைப் பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாகப் போதைப் பொருள் செடி வளர்த்த குற்றத்திற்காக எட்வின் ராஜ் பிரண்டோவை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், அதுவும் ஆளுங்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீட்டின் பால்கனியிலேயே கஞ்சா செடி வளர்த்து மாட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணனின் தரக்குறைவான பேச்சு சபை நாகரிகமா? ஸ்ரீநாத் எம்.எல்.ஏ கண்டனம்!
செவ்வாய் 19, மே 2026 8:46:45 PM (IST)

திருச்செந்தூர் சாலையில் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி!
செவ்வாய் 19, மே 2026 8:01:39 PM (IST)

அறுந்து கிடந்த மின்வயரால் தம்பதி, கல்லூரி மாணவர் பலி: ஆத்தூரில் பெரும் சோகம்!
செவ்வாய் 19, மே 2026 5:05:18 PM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் ஒப்புதல்!
செவ்வாய் 19, மே 2026 3:30:45 PM (IST)


