» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)
நாகர்கோவிலில் வருகிற 22ஆம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்றுவருகிறது.
இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது 22.05.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 22.05.2026 அன்று காலை 10.00 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் சாலையில் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி!
செவ்வாய் 19, மே 2026 8:01:39 PM (IST)

அறுந்து கிடந்த மின்வயரால் தம்பதி, கல்லூரி மாணவர் பலி: ஆத்தூரில் பெரும் சோகம்!
செவ்வாய் 19, மே 2026 5:05:18 PM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் ஒப்புதல்!
செவ்வாய் 19, மே 2026 3:30:45 PM (IST)

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)

மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் கொலை! கடத்தல் நாடகமாடிய 2 நண்பர்கள் கைது!
செவ்வாய் 19, மே 2026 10:38:05 AM (IST)


