» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு பாடை கட்டி நூதன போராட்டம் - கோவில்பட்டியில் பரபரப்பு!
வியாழன் 4, ஜூன் 2026 12:01:22 PM (IST)

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் பாடை கட்டி நூதனப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை முறையிட்டும், எவ்வித முயற்சியும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாடை கட்டி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ₹4.20 கோடி
சனி 13, ஜூன் 2026 8:12:13 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பு மலர் : மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
வெள்ளி 12, ஜூன் 2026 3:39:35 PM (IST)


