» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயில் முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் குழு : அமைச்சர் ரமேஷ் உத்தரவு
சனி 6, ஜூன் 2026 9:10:18 AM (IST)

திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், நடைமுறையில் உள்ள அன்னதான திட்டம் மற்றும் அன்னதானத்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து பணிகள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி அறை முன்பதிவு ஆகிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட கீழ்காணும் துறை அலுவலர்களை கொண்ட ஆய்வுக்குழுவினை அமைத்து உத்தரவிடப்படுகிறது.
இந்தக் குழுவில், கோ.ஜெயப்பிரியா, தங்கம், பாஸ்கரன், கார்த்திகேயன், பகவதி, மாயக்கண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். ஆய்வுக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பார்வைக்குறிப்பு ஆய்வறிக்கையின்படி ஆய்வுக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஆய்வுக்குழுவானது வரும் 20ம் தேதிக்குள் ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)

கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு எஸ்பி அபிஷேக் குப்தா பாராட்டு!
சனி 6, ஜூன் 2026 4:59:13 PM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைந்தனர்!
சனி 6, ஜூன் 2026 4:08:18 PM (IST)

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்குக் கடும் எதிர்ப்பு : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
சனி 6, ஜூன் 2026 3:16:27 PM (IST)

தமிழகத்தைப் பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான்: சத்யராஜ் உருக்கம்!
சனி 6, ஜூன் 2026 11:34:53 AM (IST)

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா!
சனி 6, ஜூன் 2026 11:19:04 AM (IST)


