» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)
தூத்துக்குடியில் பணப் பிரச்சினை காரணமாக வாலிபரை கடத்தி கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி மகன் அரவிந்த் (24). இவர் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா என்ற நாகூர் ராஜா மகன் பின்லேடன் (25) என்பவரிடம் சுமார் ரூ.40 ஆயிரம் கடனாக வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பின்லேடன், நேற்று அரவிந்தைத் செல்போன் மூலம் தொடர்புகொண்டு 4-ஆம் கேட் பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு வந்த அரவிந்தை பின்லேடன் மற்றும் அவரது நண்பர்கள் 2பேர் கட்டாயப்படுத்தித் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அருள்ராஜ் பாலம் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். பைக் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த போக்குவரத்துப் போலீசாரைக் கண்ட அரவிந்த், தன்னைக் காப்பாற்றுமாறு சத்தமாகக் கூச்சலிட்டுள்ளார். மேலும், வாகனத்தில் இருந்து கீழே இறங்கித் தப்பிக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த பின்லேடன் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தின் தலை மற்றும் கைகளில் கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அரவிந்த மீட்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மத்திய பாகம் காவல் எல்லை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
போலீசாரின் அதிரடித் தணிக்கையில், இக்கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ரோஜான்சன் (21) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான பின்லேடன் மற்றும் ராஜீவ் காந்தி நகர் பக்கீர் மைதீன் மகன் ஹனிபா மரைக்காயர் (24) ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பணத்தகராறில் வாலிபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)

பா.ஜ.க. மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர் முக்தார் கைது
புதன் 10, ஜூன் 2026 3:44:20 PM (IST)

ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்: ஜூன் 12ஆம் தேதி போராட்டம் - விவசாயிகள் முடிவு!
புதன் 10, ஜூன் 2026 3:20:38 PM (IST)

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)


