» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!
திங்கள் 29, ஜூன் 2026 8:42:53 AM (IST)

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சத்ரு சம்ஹார பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எல். முருகன் கூறியதாவது: தமிழகத்தில் அமிர்த் பாரத் திட்டத்தின்கீழ் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருநெல்வேலி - தூத்துக்குடி பிராந்தியத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் மட்டும் ரூ.16 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், கூடுதலாக அடிப்படை வசதிகள் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகத் திருச்செந்தூரில் இருந்து சென்னை மற்றும் கோவைக்குக் கூடுதலாக ரயில்களை இயக்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருச்செந்தூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சென்னை - நாகர்கோவில் இடையேயான இரட்டை ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, நான்குவழி, ஆறுவழி மற்றும் எட்டுவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுதவிர, சென்னை - பெங்களூரு, பெங்களூரு - ஐதராபாத், ஐதராபாத் - சென்னை இடையிலான புல்லட் ரயில் திட்டங்கள் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு அகமதாபாத்தில் இருந்து மும்பைக்குப் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது தென்னக ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் பிரசன்னா, மூத்த வணிக மேலாளர் கணேஷ், வணிக ஆய்வாளர் அரவிந்த், நிலைய மேலாளர் வனராஜ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மருத்துவர்கள் தினம் : மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி - முதல்வர் விஜய் வாழ்த்து!
புதன் 1, ஜூலை 2026 12:11:58 PM (IST)

பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீர்: தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட தொழிலதிபர்!
புதன் 1, ஜூலை 2026 12:06:54 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

மதுபோதையில் தாயைத் தாக்கிய மகனை எரித்துக் கொன்ற தந்தை: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 1, ஜூலை 2026 8:40:08 AM (IST)

மானிய மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது : தமிழக அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 8:34:54 AM (IST)

கனரக லாரி மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது : மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு!
புதன் 1, ஜூலை 2026 7:54:45 AM (IST)


