» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதிஒதுக்கீடு பெற்று, கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு ஹோட்டல் கூட்டரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் இன்று (11.07.2026) துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையிலும், புதிய சுற்றுலாத்தளங்களை உருவாக்குவதோடு, அந்த சுற்றுலாத்தளங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கன்னியாகுமரி, லெமூர், குளச்சல் மற்றும் தேங்காய்ப்பட்டணம் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் பேச்சிப்பாறை அணை ஆகிய பகுதிகளில் சுற்றுலா தளங்களை உருவாக்குவது குறித்து புதிய கருத்துருக்கள் (Proposals) மற்றும் திட்ட மதிப்பீடுகள் (Estimated Cost) குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல், இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இரசிக்கும் வகையில் நவீன மின்விளக்கு வசதிகள், கடற்கரை பகுதிகளில் இளைஞர்கள் உட்பட அனைவரையும் கவரும் வகையில் நீர் விளையாட்டு மற்றும் சாகசச் சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் நவீன தங்குமிடங்கள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு தமிழ்நாடு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய திட்ட மதிப்பீடுகள் விரைந்து பரிசீலிக்கப்பட்டு, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிவக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுற்றுலாதளங்களை ரூ.37 கோடி மதிப்பில் மேம்படுத்திட திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக அவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு படகு சவாரி மேற்கொள்வதற்கான நுழைவு சீட்டு வழங்கும் அலுவலகத்தினை பார்வையிட்டு, சுற்றுலா பயணிகளிடம் முறையாக நுழைவு சீட்டு வழங்கிறார்களா எனவும், சுற்றுலாபயணிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் அருகில் அமைந்துள்ள காட்சி கோபுரத்தினை பார்வையிட்டு, அந்த இடத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம், மாவட்ட வன அலுவலர் அன்பு, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியார் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், மாதவன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!
சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு குறு தொழில் கடன் உதவி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 11, ஜூலை 2026 3:22:48 PM (IST)


