» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில வாலிபர், சக பெண் தொழிலாளியைக் கத்தியால் குத்திவிட்டுத் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
அசாம் மாநிலம் டின்சுகியா பகுதியைச் சேர்ந்த அலபிச் ஹேமராம் (35), மேலஅரசரடி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாதுரி குவாலா (33) என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களைச் செல்பேசியில் காட்டி மாதுரி குவாலாவை அலபிச் ஹேமராம் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறைச் சக ஊழியர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் ஏற்பட்ட மோதலில், அலபிச் ஹேமராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாதுரி குவாலாவை குத்தியுள்ளார். சத்தம் கேட்டுத் தடுக்க வந்த சக தொழிலாளர்களான இத்வார் சுரேன், சோனு பிரியா ஆகியோரையும் கத்தியால் குத்தியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அலபிச் ஹேமராம் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
படுகாயமடைந்த அலபிச் ஹேமராம் மற்றும் மாதுரி குவாலா ஆகிய இருவரையும் மீட்டுச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அலபிச் ஹேமராமைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாதுரி குவாலாவுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துப் புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வன்னி அரசு வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜூலை 2026 5:55:15 PM (IST)

தவெக அரசின் நிர்வாகத் தோல்வி: மின்கட்டணக் குளறுபடிகளுக்கு பாஜக கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:16:12 PM (IST)

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 120 பேர் கைது: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 3:46:14 PM (IST)

தமிழ்நாட்டில் நடப்பது சாத்தானின் ஆட்சியா? - தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 3:36:01 PM (IST)


