» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் பிரம்மாண்ட நுழைவாயில்: பக்தர்களைக் கவர்ந்த புதிய முகப்புத் தோற்றம்!
சனி 25, ஜூலை 2026 7:35:24 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான புதிய நுழைவாயில், கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம் இணைந்து ரூ. 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகளைத் தொடங்கின.
இப்பணிகளை அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தற்போது வரை சுமார் 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக, கோயிலின் வடக்குப் பகுதி, சந்நிதித் தெரு வழி மற்றும் நாழிக்கிணறு செல்லும் பாதைகளில் எழில்மிகு வண்ணமயமான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கோயில் முகப்பிலும் புதிய நுழைவாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலின் புதிய முகப்புத் தோற்றம் மற்றும் கலைநயத்தை ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் பெரிதும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 5:57:50 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியையிடம் 16 பவுன் செயின் பறிப்பு: அரசுப் பள்ளி வளாகத்தில் துணிகரம்
செவ்வாய் 28, ஜூலை 2026 5:45:40 PM (IST)

தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:10:56 PM (IST)

வ.உ.சி. குறித்து நகைச்சுவை நிகழ்ச்சியில் அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கடும் கண்டனம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:32:50 PM (IST)

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு: ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறுகிறது!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:31:21 AM (IST)


